'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி!

Home > தமிழ் news
By |
'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி!

மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு,பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.

 

இந்த நிலையில் கேரள மாநிலம் பையனூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஸ்வகா தானும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தார்.இதைத் தொடர்ந்து தனது தந்தை தனக்காகவும், தனது தம்பிக்காகவும் சேர்த்து வைத்திருந்த 1 ஏக்கர் நிலத்தை  வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

 

இதனைப் படித்து பார்த்த பினராயி விஜயன் நெகிழ்ச்சியடைந்து, நிவாரணத்தை கண்ணூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கும்படி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாணவி ஸ்வகா தனது நிலத்தை கண்ணூர் கலெக்டர் முகம்மது அலியிடம் ஒப்படைத்தார்.

 

மாணவி அளித்த இந்த நிலத்தின் மதிப்பு சுமார்  50 லட்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவியின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.