மும்தாஜ்க்கு 'பாம்பு' ஐஸ்வர்யாவுக்கு 'கழுதை'.. எதுக்காக தெரியுமா?

Home > தமிழ் news
By |
மும்தாஜ்க்கு 'பாம்பு' ஐஸ்வர்யாவுக்கு 'கழுதை'.. எதுக்காக தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்துக்கான எவிக்ஷன் நடைபெற்றது. இதில் சென்றாயன், மும்தாஜ், பாலாஜி, மஹத் மற்றும் ஐஸ்வர்யா சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். தலைவி பதவியில் இருக்கும் யாஷிகாவுக்கு சிறப்பு அதிகாரம் பிக்பாஸால் கொடுக்கப்பட்டது.இதைப் பயன்படுத்தி ஐஸ்வர்யாவை நாமினேஷனில் இருந்து யாஷிகா காப்பாற்றினார்.

 

இந்தநிலையில் இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது போல காட்டப்படுகிறது. இதில் மும்தாஜ் விஷத்தன்மை கொண்டவர் என்றும், அதனால் அவருக்கு பாம்பு சின்னத்தை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு கழுதை சின்னத்தை மும்தாஜ் வழங்குகிறார். அதனை வாங்கும் ஐஸ்வர்யா இந்த வீட்டில் இன்னொரு முட்டாளா? முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு வழங்குகிறார் என கமெண்ட் அடிக்கிறார். இதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டை மீண்டும் சண்டைகள் சூழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.