கேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்!

Home > தமிழ் news
By |
கேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்!

கேரளாவில் பெய்துவந்த கனமழையினால் உண்டான வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தையே தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் தங்களது ஒரு நாள் ஊழியத்தை வழங்குகின்றனர். 

 

கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

இதேபோல்  புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், கேரள வெள்ள நிவாரணத்திற்காக தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கவிருப்பதாக அம்மாநில  முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  அண்டை மாநிலமான தெலங்கானாவில் உள்ள ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை கேரள மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளனர். 

KERALAFLOOD, KERALA, RAIN, HEAVYRAIN, KERALAFLOODRELIEF