‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்!

Home > தமிழ் news
By |
‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 11-ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதற்கிடையே பிரச்சாரத்தை மேற்கொண்ட, ராகுலும் மோடியும் வார்த்தைப் போர்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு, பிரதமர் மோடியை கிண்டல் அடித்துள்ளார். 

 

அதில்,  ‘டியர் மோடி.. பிரச்சாரங்கள் முடிந்துவிட்டன. இனியாவது நீங்கள் பார்ட் டைமாக பார்க்கும் பிரதமர் வேலைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். பிரதமராக பதவியேற்று 1,654 நாட்கள் ஆன நிலையிலும், பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வருகிறீர்கள். நான் ஹைதரபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டேன். நீங்களும் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் மீது தொடுக்கும் கேள்விக் கணைகளை சந்திப்பது குதூகலமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். 

 

RAHULGANDHI, NARENDRAMODI, CONGRESS, BJP, VIRAL, TWEET, TRENDING, PM, PARTTIME, ELECTION, CAMPAIGN