அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்

Home > News Shots > தமிழ் news
By |

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்

ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த 2017 -ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி-2’ என்கிற படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் என்பவருடன் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விசாகன் ‘வஞ்சகர் உலகம்’ என்னும் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சவுந்தர்யா-விசாகன் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

RAJINIKANTH, SOUNDARYARAJINIKANTH, VISHAGAN, MARRIAGE