'நீங்க தான் என்னோட இன்ஸ்ப்ரேஷன்'...மந்தனாவின் புகழ்ச்சியால் திக்குமுக்காடிபோன...இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ் news
By |

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா,சஹாலை தனது பேட்டிங் இன்ஸ்ப்ரேஷன் என குறிப்பிட்டுள்ளார்.

'நீங்க தான் என்னோட இன்ஸ்ப்ரேஷன்'...மந்தனாவின் புகழ்ச்சியால் திக்குமுக்காடிபோன...இந்திய வீரர்!

நியூசிலாந்துடனான முதல் டி20 போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தால்,24 பந்தில் அரைசதமடித்து குறைந்த பந்தில் அரைசதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.போட்டிக்கு பின்பு,பிசிசிஐ இணையதளத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்தனா,இந்திய சுழற்பந்துவீச்சாளர் சஹாலின் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது நான்காவது ஒருநாள் போட்டியில் சஹாலின் ஆட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவரிடமே கிண்டல் செய்தார்.மேலும் நான்காவது ஒருநாள் போட்டியின் போது சஹாலின் பேட்டிங்யில் இருந்து நான் நிறைய கற்று கொண்டதாகவும்,அணியின் வெற்றிக்கு நிறைய நேரம் ஆட வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் சஹாலின் பேட்டிங் தான் தனது பேட்டிங் இன்ஸ்ப்ரேஷன்,என கூறி சஹாலை திக்குமுக்காட வைத்து விட்டார் ஸ்மிருதி மந்தனா.ஒருநாள் தரவரிசையில் இரண்டு வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி,முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, SMRITI MANDHANA, BATTING INSPIRATION, YUZVENDRA CHAHAL, T20I, NEW ZEALAND