'டி20 போட்டியில்'...வம்புக்கு இழுத்து சென்ற விக்கெட்....கடுப்பான கேப்டன்...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ் news
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியானது நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

'டி20 போட்டியில்'...வம்புக்கு இழுத்து சென்ற விக்கெட்....கடுப்பான கேப்டன்...வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் க்ருணால் பாண்ட்யாவின் ஓவரில் அவர் வீசிய பந்தை நியூசிலாந்து அணியின் டாரியல் மித்சல் எதிர்கொண்டார்.அப்போது LBW முறையில் மித்சல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ஆனால் பந்து பேட்டின் உள்பக்கத்தில் பட்டதாக டிஆர்எஸ் கேட்டார் மித்சல்.ரீப்ளேவில் பார்த்தபோது பந்து பேட்டில் பட்டதாக ஹாட்ஸ்பாட்டில் தெரிந்தது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படாது போல் காண்பித்தது.எனவே மூன்றாவது அம்பயரும் அவுட் என அறிவித்தார்.

இதனால் மித்சல் கடுப்பாக,உடனே இந்தியா கேப்டன் ரோஹிட் சர்மா மற்றும் தோனியும் அம்பயருடன் கலந்து பேசினர்.இந்த விவகாரம் தற்போது ட்விட்டரில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

CRICKET, MSDHONI, TWITTER, DRS HOWLER, LBW, DARYL MITCHELL