’தோனி ‘மச்சி’னு கூப்டுவார்.. சச்சின் எப்டின்னா?’.. நெகிழும் ஷூ தைக்கும் தொழிலாளி!
Home > தமிழ் newsசேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சச்சின், தோனி போன்ற கிரிக்கெட் பிளேயர்களின் அதிகாரப்பூர்வமான காப்லர் பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன். தன்னுடைய 28 கால அனுபவத்தில் கிரிக்கெட் பிளேயர்களின் கேரக்டர்களை பற்றி சுவாரசியமாக பேசிவரும் இவர் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறார்.
1993-ல் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போதில் இருந்து இன்று வரை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிழிந்த ஸூ, கிளவுஸ் போன்றவற்றை தைக்கும் காப்லர் பணியில் ஈடுபட்டு வருகிறார் பாஸ்கரன். தேவக்கோட்டையைச் சேர்ந்த இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாத நிலையிலதான் இந்த தொழிலுக்கு வந்துள்ளார். பின்னாட்களில் தன் பிள்ளைகளின் படிப்பிற்கு கிரிக்கெட் மூலம் செய்துவந்த இந்த தொழில்தான் உதவியதாக இருந்து வருவதாக கூறுகிறார்.
தனது பணிகுறித்து அவர் பேசுகையில், மேட்ச் நடக்கும் போது பெரும்பாலும் தோனியின் அருகில் தான் அமர்ந்திருப்பார் என்றும் தன்னை சந்திக்கும் போது ஹாய் மச்சி...ஹவ் ஆர்யூ என்று தோனி கேட்பார், பதிலுக்கு ஃபைன் என்று சொல்லிவிட்டு சிரித்தபடி தனது வேலைகளைத் தொடருவேன் என்றும் குறிப்பிடும் பாஸ்கரன், தனக்கு ஹிந்தி தெரியும் என்பதாலும், கிரிக்கெட் வீரர்களுக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்பதாலும் சுலபமாக அவர்களிடம் பேச முடிந்ததாக கூறியுள்ளார்.
தல தோனியைப் பொறுத்தவரை அவர் செம கூலான ஒரு ஆள். மேட்ச்சில் தோற்றுவிட்டாலும் கூட கூலாக இருப்பார். சச்சின், கங்குலி அநாவசியமாக பேசமாட்டார்கள். ஆனால் தேவையான அட்வைஸ்களை செய்வார்கள். வாட்சன், வார்னர் எல்லாம் நல்ல டைப் என்றெல்லாம் கூறும் பாஸ்கரன் கிறிஸ் கெய்ல், ஏ.பி.டி வில்லியர்ஸ், வார்னே, வாட்சன் போன்ற இண்டர்நேஷனல் பிளேயர்ஸ்களுக்கும் போட்டியின் போது ஷூ தைத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்.
தோனி, ரெய்னா, சச்சின், விராட் கோலி எல்லாம் நல்ல க்ளோஸான தொடர்புகள் இருந்தும் ஸ்டேடியத்தின் வாசலில் வேலை செய்யும் பாஸ்கரனின் நேர்மையும் உழைப்பும் பலரையும் கவர்ந்துள்ளது.