இப்படியா ஓடி புடிச்சி விளையாடுறது?...கன்பியூஸ் ஆன நடுவர்...கடுப்பான வீரர்கள்...வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |

ரன் அவுட் செய்யும்போது இரண்டு வீரர்களும் ஒன்றாக ஓடியதால்,இருவரில் யார் அவுட் ஆனார் என்ற குழப்பம் நடுவருக்கு ஏற்பட்டது.இதனால் வீரர்கள் எரிச்சலடைந்தார்கள்.

இப்படியா ஓடி புடிச்சி விளையாடுறது?...கன்பியூஸ் ஆன நடுவர்...கடுப்பான வீரர்கள்...வைரலாகும் வீடியோ!

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 0-3 எனவும், ஒரு நாள் தொடரை 2-3 எனவும், டி-20 தொடரை 1-2 எனவும் பாகிஸ்தான் அணி இழந்தது.இந்நிலையில் கடைசி டி-20 போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்தப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியினை பெற்றது.

இதனிடையே பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது,தென்னாப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி பந்து வீசினார்.அப்போது பந்தை எதிர்கொண்ட கேப்டன் சோயப் மாலிக், பந்தை லெக் சைடில் அடிக்க, அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த பெலுக்வாயோவிடம் பந்து செல்ல,அதனை பிடித்து கீப்பரிடம் எறிந்தார்.அதனை விக்கெட் கீப்பர் கிளாசன் ரன் அவுட் செய்தார்.ஆனால் சோயப் மாலிக் மறுமுனையை நோக்கி ஓடினார். மறுமுனையில் இருந்த ஹுசைன் தலாத்தும் பாதி தூரம் ஓடி வந்துவிட்டு திரும்பிச் சென்றார்.இதனால் இருவரில் யார் அவுட் என்ற கடுமையான குழப்பம் நிலவியது.

நடுவர்கள் சுமார் 2 நிமிடங்களுக்கு பிறகு,சோயப் மாலிக் தான் அவுட் என 3-வது அம்பயர் தனது முடிவினை தெரிவித்தார்.இரு வீரர்களும் ஒரே திசையில் ஓடினாலும்,முன்னால் ஓடிய வீரரைவிட சோயப் மாலிக் சற்றுப் பின்தங்கியதால் அவர் தனது விக்கெட்டினை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த முடிவினை அறிவிக்க நீண்ட நேரம் ஆனதால் தென்னாப்ரிக்க வீரர்கள் சற்று கடுப்பில் இருந்தார்கள்.

shoaibmalik_edit_0 from Not This Time on Vimeo.

PAKISTAN, CRICKET, SHOAIB MALIK, 3RD UMPIRE, SOUTH AFRICA