'நம்ம கிரிக்கெட்டோட மூளையே 'தல' தான்'...அவர் கண்டிப்பா உலககோப்பைக்கு வேணும்...நெகிழ்ந்த வீரர்!

Home > News Shots > தமிழ் news
By |

பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்ற தோனி நிச்சயம் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என யுவராஜ் சிங் தொிவித்துள்ளாா்.அவர் தான் இந்திய அணியின் மூளை என பெருமையுடன் குறிப்பிடுள்ளார்.

'நம்ம கிரிக்கெட்டோட மூளையே 'தல' தான்'...அவர் கண்டிப்பா உலககோப்பைக்கு வேணும்...நெகிழ்ந்த வீரர்!

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னால் தோனி சரியாக விளையாடவில்லை எனவும் அவரது பேட்டிங் சரி இல்லை எனவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.கடந்த 2018-ம் ஆண்டு 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி  275 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது தான் அதற்கு காரணமாக கூறப்பட்டது.இந்நிலையில் தோனி குறித்து மிகவும் பெருமையுடன் கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங்,தோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்தவர்,எனவே நிச்சயம் அவரது அனுபவம் கைகொடுக்கும் என குறிப்பிடுள்ளார்.

தோனியின் முடுவெடுக்கும் திறன் என்பது மிகவும் அசாத்தியமானது.அவர் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை அவரால் நன்றாக கவனிக்க முடியும்.மேலும் தோனியின் அணுகுமுறை நிச்சயம் கேப்டன் கோலிக்கு உதவியாக இருக்கும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்திய தோனி,அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CRICKET, YUVRAJSINGH, WORLD CUP 2019