கால்களை இழந்தாலும்'..மாணவர்களின் கல்விக்கண்ணை திறக்க உழைக்கும் ஆசிரியர் !

Home > தமிழ் news
By |
கால்களை இழந்தாலும்'..மாணவர்களின் கல்விக்கண்ணை திறக்க உழைக்கும் ஆசிரியர் !

உடல் நல்ல நிலையில் இருக்கும் பல பேர் என்னால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியவில்லை என ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள்.எந்த துறையில்  ஜெயிப்பதற்கும்  உடலில் இருக்கும் ஊனம் தடையில்லை மனதில் தான் ஊனம் இருக்கக்கூடாது என்பதை பலபேர் நிரூபித்து அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் ஆசிரியர் ஒருவர்,மனதில் இருக்கும் ஊனம் தான் பெரிய தடை உடலில் இருப்பது அல்ல என நிருபித்திருக்கிறார்.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்சய் சென்,இவருக்கு சிறுவயதில் காலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவரால் நடக்க இயலாமல் போனது.இருந்தபோதும் மனம் தளராமல் பத்தாம் வகுப்போடு படிக்க இயலாமல் நிற்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

 

அறிவியல்,ஆங்கிலம்,கணிதம் போன்ற பாடங்களில் படிக்க இயலாமல் பல மாணவர்கள் பத்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்.இதுபோல் மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக Shiksha Sambal என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

இதன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் சஞ்சய் சென் பல மாணவர்களுக்கு தினமும் பாடம் நடத்தி வருகிறார்.இதன் மூலம் பல மாணவர்களை பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு கொண்டுவந்ததில் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.ஏதாவது ஒரு காரணத்தினால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறிக்கொண்டு,எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பவர்கள் மத்தியில் சஞ்சய் சென் போன்றோர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள் தான்.

SANJAY SEN, TEACHER, SHIKSHA SAMBAL