செல்போனில் கத்திப் பேசியவரை குத்திக்கொலை செய்த இந்தியர்!

Home > தமிழ் news
By |
செல்போனில் கத்திப் பேசியவரை குத்திக்கொலை செய்த இந்தியர்!

துபாய், அபுதாபியின் அல்-குச்ஸாயிஸ் இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.  அங்குதான் போனில் சத்தமாக பேசியவரை ஒரு இந்தியர் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

37 வயதான இந்திய ஊழியர் கடந்த மார்ச் மாதம்,  குடித்து விட்டு தனது அறைக்கு சென்றிருக்கிறார். அங்கு போனில் சத்தமாக பேசிய  வேறு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரை பார்த்துள்ளார். அவர் போனில் கத்தி கத்தி பேசிக் கொண்டிருந்ததால் கடுப்பான இந்தியர் அவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளதாகக் கூறப்பட்டது.

 

அதன் பின் அங்குவந்த டிரைவர், ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த வெளிநாட்டவரை பார்த்து பலருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்.  பின்னர் அந்த இந்தியர் கைகளில் கத்தியுடன், விரல்களிடையே ரத்தம் வழிய வெளிவந்த காட்சியை பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தின் பேரில் கொலையாளி நீண்ட நாட்கள் விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

 

இது குறித்த தகவல்களை வெளிநாட்டு வேலை ஆட்கள் கண்காணிப்பு அமைப்புகளின் சங்கத் தலைவர் மற்றும் சிசிடிவி மூலம் உறுதிப்படுத்திய நீதிமன்றம் வரும் அக்டோபர் 7ம் தேதி, இந்த வழக்கின் மீதான தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ளது.

MURDER, CRIME, LOUDPHONETALK