'ஒரே ஜம்பில் பல ஆண்டு...சாதனையை சமன் செய்த வீரர்...''தல''-யை பின்னுக்கு தள்ளி முன்னேற்றம்!

Home > தமிழ் news
By |
'ஒரே ஜம்பில் பல ஆண்டு...சாதனையை சமன் செய்த வீரர்...''தல''-யை பின்னுக்கு தள்ளி முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில்,இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்  17வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது,கோலி தலைமையிலான இந்திய அணி.இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.இந்நிலையில் சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலானா ஐசிசி,டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இந்த தரவரிசையில் அணிகளுக்கானப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறது.வீரா்களுக்கான பிரிவில் விராட் கோலியும் முதல் இடத்தில் தொடா்கிறாா். இந்த தொடரில் 521 ரன்கள் குவித்த புஜாரா,ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாா்.

 

இந்த தொடரில் அனைவரின் பாராட்டையும் பெற்ற இளம் வீரர் ரிஷப் பண்ட்,தரவரிசை பட்டியலில் 21 இடங்கள் முன்னிலை பெற்று,17வது இடத்தை பிடித்துள்ளாா்.டெஸ்ட் தரவரிசையில் 19வது இடத்தை பிடித்ததே தோனியின் சிறந்த டெஸ்ட் தரவரிசை இடமாக இருந்தது. ஆனால் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பண்ட்,17வது இடத்தை பிடித்து தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளாா்.

 

மேலும் கடந்த 1973ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பரோக் 17வது இடத்தை பிடித்ததே,இந்திய விக்கெட் கீப்பா் ஒருவர் அடைந்த சாதனையாக இருந்தது.இந்நிலையில் இளம் வீரரான ரிஷப் பண்ட்,தற்போது அந்த சாதனையையும் சமன் செய்து அசத்தியுள்ளார்.

BCCI, VIRATKOHLI, RISHABH PANT, ICC TEST RANKINGS