'தனக்கு பிறக்காத 3 மகன்கள்.. 21 வருடங்கள் கழித்து அறிந்த நபர்’.. முன்னாள் மனைவி மீது வழக்கு!
Home > தமிழ் news
21 வருடங்கள் கழித்து தனக்கு பிறந்த குழந்தைகள் 3 பேர் உண்மையில் தனக்கு பிறந்தவர்கள் இல்லை என இங்கிலாந்தைச் சேர்ந்த 55 வயதான தொழிலதிபர் ரிச்சர்டு மாசன் கண்டுபிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கு சிஸ்டிக் பைபரோஸிஸ் நோய் இருப்பதை டாக்டர்கள் மூலம் அறிந்துள்ள ரிச்சர்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உறைந்துபோயுள்ளார். மேலும் தன் வாழ்க்கையே முறிந்துவிட்டதாகவும் இதற்கு தனது முன்னாள் மனைவிதான் காரணம் என்றும் முடிவெடுத்துள்ளார்.
ஆம், ரிச்சர்டின் முன்னாள் மனைவி கேட், ரிச்சர்டுக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதை மறைத்துள்ளார். அதன் பிறகு ரிச்சர்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து செல்லும்போது ஜீவனாம்சமாக 4 மில்லியன் டாலரையும் பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது டிஎன்ஏ சோதனைக்கு பிறகு ரிச்சர்டுக்கும், கேட்-டுக்கும் பிறந்ததாக கருதப்பட்ட 23 வயதான மூத்த மகனும், 19 வயதுள்ள இளம் வயது இரட்டையர்களான 2 மகன்களும் தனக்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை அறிந்த ரிச்சர்டு, கேட்டின் 3 மகன்களுடனான உறவை துண்டித்ததோடு, இந்த உண்மைகளை தன்னிடம் இருந்து மறைத்ததற்காக தன் முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.