'அணியிலிருந்து விலகும் முன்னணி வீரர்கள்'...இரண்டாவது டெஸ்டின் வெற்றியை பாதிக்குமா?

Home > தமிழ் news
By |
'அணியிலிருந்து விலகும் முன்னணி வீரர்கள்'...இரண்டாவது டெஸ்டின் வெற்றியை பாதிக்குமா?

காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான அஷ்வின் மற்றும் ரோஹித் ஷர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிவரும் இந்திய அணியின்,முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் மற்றும்  முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.அஷ்வின் வயிற்றுவலியாலும், ரோஹித் முதல் டெஸ்டின் போது எற்பட்ட காயத்தாலும் ஆடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம்பெறாத இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்னும் குணமடையாததால் இந்த டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.

 

அதனால் இந்த மூவரும் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று அறிவித்துள்ள பிசிசிஐ 13 பேர் கொண்ட அணியையும் அறிவித்துள்ளது. அதில் விஹாரி, ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அஷ்வின் காயம் காரணமாக விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

RAVICHANDRAN ASHWIN, CRICKET, BCCI, INDIA VS AUSTRALIA, ROHIT SHARMA