'தல இந்திய டீம்ல இருக்கணுமா'...அப்போ இது தான் ஒரே வழி !

Home > தமிழ் news
By |
'தல இந்திய டீம்ல இருக்கணுமா'...அப்போ இது தான் ஒரே வழி !

தோனி மட்டுமில்லாமல் எல்லா சீனியர் வீரர்களும் உள்ளூர் தொடரில் பங்கேற்று, தங்களின் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கமுடியும் என,இந்திய ஆல் ரவுண்டர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் மிக சிறந்த பினிஷர் என அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.அனால் அவரது பேட்டிங் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் அவரது கீப்பிங் திறமை மற்றும் இக்கட்டான நிலைமையில் அணிக்கு அவர் அளிக்கும் ஆலோசனைகள்,அவரை அணியில் இன்னும் நீடித்திருக்க வைத்திருக்கிறது.

 

இந்நிலையில் மேற்கிந்திய அணிக்கு எதிரான டி-20, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்டார். இதற்கு அவருக்கு அடுத்த சிறந்த விக்கெட் கீப்பருக்கான தேடுதல் தான் காரணம் என தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாடி சர்வதேச அணிக்கான தேர்வில் இடம்பெற,தோனி மட்டும் விதிவிலக்கல்ல என்ற சர்ச்சை சமீபத்தில் தலை தூக்கியது.

 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய ஆல் ரவுண்டர்,மற்றும் தேர்வுக் குழு தலைவர் மோஹிந்தர் அமர்நாத்"ஒவ்வொரு வீரரும், தனித்தனி தான்.அவர் சாதிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவரது மாநிலத்திற்காக விளையாடி அவர்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.மேலும் தோனி மட்டுமில்லாமல் எல்லா சீனியர் வீரர்களும் உள்ளூர் தொடரில் பங்கேற்று, தங்களின் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபிப்பது அவசியம். இது ஒன்று தான் தோனியை சர்ச்சையில்லாமல் அடுத்த உலகக்கோப்பை அணி வரை கொண்டு செல்ல முடியும்''என்றார்.