பலியான வீரரின் சடலத்தை தோள்கொடுத்து தூக்கிய உள்துறை அமைச்சர்.. வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ் newsகாஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் சடலப்பெட்டிகள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சவப்பெட்டியை தன் தோளில் தூக்கிச் சென்றுள்ளார்.
நேற்று ஜைஸ்-இ-அகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த செய்தியைக் கேட்டவுடன் பலரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ உதவிகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பலியான ராணுவ வீரர்களின் உடல்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து இறந்தவர்களின் உடலினை அனுப்பும் பணிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்ரீநகர் டிஜிபி தில்பாக் சிங் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தனது தோள்களில் ராணுவ தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் சவப்பெட்டியை தூக்கிச் சென்றார்.
பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்ரமணியன் ஆகிய இருவரும் பலியாகியிருப்பதால் அவர்களின் குடும்பங்களில் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. இவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசுரூ. 20 லட்சம் இழப்பீடாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH: Home Minister Rajnath Singh and J&K DGP Dilbagh Singh lend a shoulder to mortal remains of a CRPF soldier in Budgam. #PulwamaAttack pic.twitter.com/CN4pfBsoVr
— ANI (@ANI) February 15, 2019