அதிரடி மாற்றங்களுடன் வெளியான ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்!

Home > News Shots > தமிழ் news
By |

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதிரடி மாற்றங்களுடன் வெளியான ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்!

முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வரலாற்று சாதனை நிகழ்த்தியது. பின்னர் ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி   சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதில் கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மீதமிருந்த போட்டிகளில் ரோஹித் ஷர்மா கேப்டனாக அணியை வழி நடத்தினார். ஆனால்  நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணமாக இந்தியா வரவுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய வீரர்கள் விபரம், விராட் கோலி(கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, விஜய் சங்கர், சஹால், பும்ரா, உமேஷ் யாதவ், சிதார்த் கவுல், மயாங்க் மார்கண்டே.

முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் விபரம், விராட் கோலி(கேப்டன்), ரோகித் ஷர்மா, அம்பட்டி ராயுடு, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், முகமது ஷமி, சஹால், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சிதார்த் கவுல், கே.எல்.ராகுல்.

மீதமிருக்கும் 3 ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் விபரம், விராட் கோலி(கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா,  சஹால், பும்ரா, உமேஷ் யாதவ், சஹால், புவனேஷ்வர் குமார்,விஜய் சங்கர், முகமது ஷமி.

 

TEAMINDIA, INDVSAUS, BCCI