‘எங்க திருமணம் நடந்ததுக்கே.. பப்ஜிதான் காரணம்’.. உருகும் ஜோடிகள்..வைரல் ஸ்டோரிகள்!
Home > தமிழ் newsஉலகம் முழுவதும் குழந்தைகளின் கவனத்தை தன் பக்கம் இழுத்து அவர்களின் நேரத்தை உறிஞ்சி, சிந்தனையை மழுங்கச் செய்யும் கேமாக பலரால் குற்றம் சாட்டப்படும் ஒரு கேம் பப்ஜி.
மிக அண்மையில் பிரதமர் மோடியும் கூட ஒரு கருத்தரங்கத்தில் குழந்தைகள் பப்ஜி விளையாடுவதைப் பற்றிய பெற்றோர்களின் புகார்களுக்கு நகைச்சுவையாக பதிலளித்திருந்தார். ஆனால் அந்த பப்ஜி விளையாட்டால் காதல் ஜோடிகள் சிலர் இணைந்துள்ள விஷயம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த முஹமது ரஷீன் என்கிற இளைஞரும், அதேபகுதியைச் சேர்ந்த சல்வா அஹமது என்கிற பெண்ணும் 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் சல்வா கல்லூரி கடைசி ஆண்டு படிக்கும்போது, வியாபார நிமித்தமாக ரஷீன் அரபு நாடுகளுக்குச் சென்றபோதுதான் இருவரின் உறவிலும் பெருத்த விரிசல் உண்டானது. தூரத்தில் இருந்ததாலும், நேரம் ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவராலும் அடிக்கடி பேசிக்கொள்ளவோ தங்களது காதலை மீட்டெடுத்துக் கொள்ளவோ வழியில்லாமல் இருந்துள்ளது. அப்போதுதான் இருவரும் கூட்டணி போட்டு பப்ஜி கேம் விளையாண்டு, ஆர்டிபிசியல் எதிரிகளை வீழ்த்தியுள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் விலகியிருந்த உறவு மீண்டும் பரிணமிக்கத் தொடங்கியுள்ளது.
எனினும் பப்ஜி மூலம் சாட்டிங், சண்டை என காதல் முட்டிப் போய், பின் காதல் முற்றிப்போய் பின்னர் அந்த பாய்ண்ட்ஸ்களை வைத்து கடந்த ஆகஸ்ட்டில் திருமணம் செய்து, அந்த வரவேற்பறையில் இருவரும் பப்ஜி விளையாடும்போது எடுத்த புகைப்படங்களை நிறுத்தி வைத்திருந்துள்ளனர். பப்ஜிக்கு அடிமையான மனநிலை உடைய பலரும் பலவிதமாக பாதிப்புகளை சந்தித்து வரும் சூழலில் இத்தனை சுவாரஸ்யமான காதல் திருமண கதைக்கு பப்ஜி உதவியிருப்பது பலரிடையே புதிதாக பார்க்கப்பட்டு வருகிறது. தங்களது பப்ஜி இணையருடனேயே திருமணம் நடந்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்த பப்ஜி ஜோடிகள் நெகிழ்ந்துருகி பேசுகின்றனர்.
இதேபோல் எகிப்தைச் சேர்ந்த நூர்கான்-அல்-ஹாஷிஸ் என்பவருக்கும் பப்ஜி கேமில் தனது அணியில் விளையாடிய ஒரு பெண்ணுக்கும் காதல் உண்டாகியுள்ளது. இதனையடுத்து நூர்கான் தனக்கும் அப்பெண்ணுக்குமான நிச்சயதார்த்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தங்களது உறவு ‘பப்ஜியில் தொடங்கி திருமணத்தில் நிற்பதாக’ மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.