இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்.எல்.ஏ-வின் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு!
Home > தமிழ் news
இளைஞர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் விரும்பும் பெண்களை கடத்தி அவர்களின் திருமணத்துக்கு உதவுவதாக கூறியிருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமின் பேச்சு இரண்டு நாட்களுக்கு முன்பாக சர்ச்சையை கிளப்பியிருந்தது. அரசியலாளரள் பலரும் இந்த அச்சத்துக்குரிய பேச்சுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அவரது நாக்கை அறுத்தால், அவர்கள் ரூ.5 லட்சம் தருவதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சுபோத் சாவ்ஜி கூறியுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுபோத் சாவ்ஜியின் நேரடியான இந்த விமர்சன கருத்து வைரலாகி வருகிறது.
CONGRESS, BJP, RAMKADAM, MLARAMKADAM