'எனக்குத் தண்டனை அளித்து விடாதீர்கள்'.. மன்னிப்பு கேட்ட கோலி!
Home > தமிழ் newsஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை சாதனைகள் பின் தொடர்வது போல, சர்ச்சைகளும் அடிக்கடி பின் தொடர்கிறது.சமீபத்தில் கோலி தனது சிட்னி டெஸ்ட் சர்ச்சை குறித்து வெளிப்படையாக மனந்திறந்து பேசியுள்ளார்.
2012 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரண்டாம் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் பவுண்டரி எல்லை அருகே நின்று இருந்த கோலியைப் பார்த்து திட்டி இருக்கிறார்கள். அதற்கு கோலி, தன் நடுவிரலை காட்டி சைகை செய்தார்.
இது குறித்து தனது பேட்டியில் கோலி "போட்டியின் நடுவர் ரஞ்சன் மடுகுலே என்னை அழைத்தார். நான் என்ன பிரச்சனை?என்பது போல நான் அவரது அருகில் போய் நின்றேன். அவர்,நேற்று பவுண்டரி கோட்டுக்கருகில் என்ன நடந்தது? என கேட்டார். நான், ஒன்றும் இல்லை என கூறினேன். அவர் என் முன் ஒரு செய்தித்தாளை வீசினார். அதில் நான் விரலை காட்டும் பெரிய படம் ஒன்று வெளியாகி இருந்தது.
அதனை பார்த்த நான் "மன்னித்து விடுங்கள். எனக்கு தடை விதித்து விடாதீர்கள்" என அவரிடம் மன்னிப்பு கேட்டேன். தொடர்ந்து அதில் இருந்து நான் தப்பித்து விட்டேன். அவர் மிகவும் நல்லவர். நான் இளமைக் காலத்தில் இருந்ததாலும், இது போன்ற சம்பவங்கள் எனது எதிர்காலத்தை பாதிக்கும் என்பதாலும் அவர் மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை,'' எனத் தெரிவித்துள்ளார்.
அவருடைய கிரிக்கெட் வாழ்வில் சிட்னி டெஸ்ட் சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.