ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Home > தமிழ் news
By |
ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

விமான நிலையத்தில் பாஜகவை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சோபியா, தூத்துக்குடி நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

 

அதன் பிறகு  புதுக்கோட்டை காவல்நிலையத்தில், சோபியாவின் பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கிக்கொண்டனர். எனினும், அந்த பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி ஒரிஜினல் பாஸ்போர்ட்டினை ஒப்படைக்க வேண்டும் எனவும், சோபியாவின் தந்தையுடன் சோபியா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 

 

சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் இதுபற்றி பேசியபோது, விசாரிக்க மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால் அதை முடக்கி திரும்பவும் சோபியா கனடாவுக்குச் செல்லமுடியாமல் செய்வதற்கான முயற்சியாகவும் இது இருக்கலாம். எனினும் அவற்றை சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.