விமானத்தில் பறந்து பறந்து பிரதமர் மோடி எடுத்த வைரல் ’க்ளிக்ஸ்’!
Home > தமிழ் news
பல நாட்டு பிரதமர்களுக்கும் புகைப்படங்களை எடுப்பதில் அலாதியான பிரியம் இருக்கும். பல நாடுகளுக்கும் பயண வழியில் செல்வது, பழங்குடியினரின் ஆடையை அணிவது எல்லாவற்றையும் தாண்டி, தனக்கான பார்வைக்கும் ரசனைக்குமான இடம் வெகு குறைவாகவே இருக்கும். அவ்வகையில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கூறியிருந்தார்.
செல்லும் வழியில் அவர் கண்களுக்கு அற்புதமான காட்சி அகப்பட்டிருக்கிறது. ஆகாயத்தில் இருந்து பூமியைப் பார்த்தாலே, அழகாய்த் தோன்றும் என்பதில் ஆச்சரியமில்லை. இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான அதன் தோற்றம் கண்ணைக் கவரும்பொழுது, யாருக்குத்தான் அந்த தருணத்தை பதிவு செய்யத் தோன்றாது. விமானத்தில் சிக்கிம் செல்லும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.