செல்போன் விவகாரம்.. சந்தேகத்தில் ’கரூர்’ சிறுவன் அடித்துக் கொலை!
Home > தமிழ் newsகரூரில் செல்போன் திருடியதாக கூறி சிறுவன் அடித்து கொல்ல பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டதாகவும் அதனால் அதுகுறித்து விசாரிப்பதற்கு வந்திருப்பதாகவும் கூறி மர்ம நபர்கள் அந்த சிறுவனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.இதில் அந்த சிறுவன் தனது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை தாக்கிய நபர்களை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில் "உயிரிழந்த சிறுவன் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட கூடியவன் என்றும் அந்த சிறுவனின் தாயார் கணவனை இழந்த நிலையில் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் சிறுவனை வளர்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று வீட்டில் பாலசுப்ரமணியனும் அவரது தாயார் மற்றும் சகோதரிகள் இருந்துள்ளனர். பாலசுப்ரமணியத்தை தாக்கிய கும்பல் அவரைக் கதற கதற வெளியே இழுத்துவந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உருட்டுக்கட்டையாலும், கைகால்களாலும் தாக்கி உள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சாதாரண திருட்டு போன்ற குற்றங்களுக்கு காவல்துறையின் மூலம் தண்டனை பெறும் காலத்தில் வடமாநிலங்களில்தான் இதுபோன்று கட்டி வைத்து கொடூரமாக தாக்கி கொல்லும் சம்பவங்கள் நடக்கும். ஆனால் தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற கொடூர கலாச்சாரம் ஓங்கி வருவது மிகவும் வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.