‘ஐசிசி எதுக்கு தடை பண்ணுது?.. அவர் என்ன ஸ்கூல் பையனா?’.. கிரிக்கெட் வாரியத் தலைவர்!!

Home > தமிழ் news
By |

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோதி விளையாடிவருகிறது. 

‘ஐசிசி எதுக்கு தடை பண்ணுது?.. அவர் என்ன ஸ்கூல் பையனா?’.. கிரிக்கெட் வாரியத் தலைவர்!!

முன்னதாக டர்பனில் நிகழ்ந்த 2-வது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாவ்யோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 69 ரன்கள் ஸ்கோர் செய்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 37-வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த அவரிடம் பாகிஸ்தான் அணியின் கேப்டனும், அங்கு விக்கெட் கீப்பராக நின்றுகொண்டிருந்தவருமான சர்ஃப்ரஸ் அஹமது நிறவெறியைத் தூண்டும் விதமாக பேசினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், தான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் யாருக்கும் கேட்க வேண்டும் என்று நினைத்து பேசவில்லை. எனக்குள்ளேயே பேசிக்கொண்டது துரதிர்ஷ்டவசமாக ஸ்டெம்பின் மைக்கில் பதிவாகியதால் இந்த விளைவு உண்டாகிவிட்டது என்றவர், இனிமேல் இவ்வாறான தவறான விஷயங்கள் நிகழாது என்றும் தெரிவித்தார். சர்ஃப்ரஸ் அஹமதுவின் மன்னிப்பு கோரிக்கைக்கு பதில் அளித்த தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளீசிஸ், ‘பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நாங்கள் மன்னிக்கிறோம். ஆனால் அதற்காக சாதாரணமாக இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டோம் என்று நினைக்க வேண்டாம்’ என்று கூறினார்.

எனினும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அஹமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது.  இதனையடுத்து தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி  2 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சோயப் மாலிக் நியமிக்கப்பட்டார். இதனிடையே, சர்ஃபரஸ் அகமது செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோயப் அக்தர்  தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு பின்னர் உடனே நீக்கிவிட்டார். ஏனென்றால் அதற்குள் சர்ஃப்ரஸ் மன்னிப்பு கேட்டுவிட்டார். எனினும் அக்தரின் வீடியோ பதிவில் எந்த தவறுமில்லை, தவறு தன்னுடையதுதான் என்றும் சர்ஃப்ரஸ் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், செய்த தவறுக்கு சர்ஃப்ரஸ் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் அவரை 4 போட்டிகளில் விளையாடக்கூடாதென ஐசிசி விதித்துள்ள தடை முட்டாள் தனமானது என்றும் அவர் ஒன்றும் பள்ளிச்சிறுவர் அல்ல என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மணி விமர்சித்துள்ளார்.

SAVPAK, RACIST, ICC, CRICKET, SARFRAZAHMED