WATCH VIDEO: 'அடப்பாவிகளா'...ஜெய்கிறதுக்கு இப்படி எல்லாமா பண்ணுவீங்க!
Home > தமிழ் newsபிப்ரவரி 1ம் தேதியான இன்று கடந்த 1981ம் வருடம் கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்த நாள்.அந்த அதிர்ச்சிக்கு காரணமான அணி ஆஸ்திரேலியா.
கடந்த 1981ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய பென்சன் & ஹெட்ஜ்ஸ் உலக சீரியஸ் கோப்பை போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கடுமையாக போராடி 236 ரன்கள் சேர்த்தது.கடைசி ஒரு பந்து இருக்க அதில் 6 ரன்கள் எடுத்தால் போட்டியை சமன் செய்து விடலாம் என்ற எண்ணத்துடன் நியூசிலாந்து வீரர் மெக்கொன்னே களமிறங்கினார்.
அந்த நேரத்தில் தான் ஆஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத,மிக கேவலமான வேலையை செய்தது.நியூசிலாந்து அணி போட்டியை டை செய்வதை தவிர்க்கும் விதமாக,அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சாப்பல், தனது சகோதரர் டிரெவரை, அண்டர் ஆர்ம் முறையில் (பந்தை உருட்டி விடுவது) பவுலிங் செய்யும் படி தெரிவித்தார்.அவரும் அவ்வாறே செய்ய ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிகழ்வு சர்வேதே கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கடும் சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.அதோடு இந்த நிகழ்வு 'அண்டர் ஆர்ம் பௌலிங்' முறையை கிரிக்கெட்டை விட்டு நீக்குவதற்கு மூலகாரணமாகவும் அமைந்தது.