உரக்கச் சொல்லுங்கள்: #MeTooவுக்கு தேசிய பெண்கள் ஆணையம் ஆதரவு!
Home > தமிழ் news
சமீப காலமாகவே பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து #MeToo என்கிற ஹேஷ்டேகில் பாதிக்கப்பட்ட கசப்பான அனுபவங்களை துணிச்சலாக பல பெண்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.
இதில் பெரிய அரசியல்வாதிகள், கலைத்துறையினர் என பலரும் தத்தம் அனுபவங்களை பகிரத் தொடங்கியுள்ளனர். இதேபோல் தொடமுடியாத உயரத்தில் இருப்பவர்களின் மீதான குற்றப் புகார்களையும் வைக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் இதுபோன்று துணிச்சலான #Metoo பதிவுகளை ஆதரித்தும், மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகார்கள் கண்காணிக்கப்படுகின்றன என்றும், பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது.
SEXUALABUSE, NATIONALWOMENSCOUNCIL, GIRL
