‘ஒரே ஒரு அடிதான்.. மொத்த உண்மையும் வெளிவந்துடுச்சு’..விசாரணை பற்றி ஐபிஎஸ் அதிகாரி!
Home > தமிழ் newsஇந்திய ராணுவ வீரர் அடித்த ஒரு அடியிலேயே பயங்கரவாத திட்டம் பற்றிய அனைத்தையும் மசூத் அசார் சொல்லிவிட்டதாக இவ்வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சுமார் 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்தனர். அப்போது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது இந்த அமைப்பின் தலைவமைப் பொறுப்பில் இருந்த மசூத் அசார்.
கடந்த 1994 -ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு படையினரால் காஷ்மீரில் மசூத் அசார் கைது செய்யப்பட்ட பிறகு, 1999 -ஆம் ஆண்டு இந்திய விமானத்தைக் கடத்தி, பயங்கரவாதிகள் மசூர் அசாரை மீட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை ஆரம்பித்து அங்கிருந்தபடியே பயங்கவாத செயல்களில் மசூத் அசார் ஈடுபட்டு வந்திருந்தது பலருக்கும் தெரியவந்தது.
இந்நிலையில் மசூர் அசாரிடம், அப்போது விசாரணை நடத்திய, சிக்கிம் மாநில டி.ஜி அவினாஷ் மோஹனானே ஐபிஎஸ் அந்த விசாரணை பற்றி கூறியுள்ளார். அதில், ‘போலியான போர்ச்சுக்கல் பாஸ்போர்ட் மூலம் பங்களாதேஷ் வந்த மசூர் அசார், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்ததை அடுத்து 1994 -ஆம் ஆண்டு காஷ்மீரின் ஆனந்த்நாக் என்கிற பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் மசூரை கைது செய்தனர்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர்,‘மசூர் அசாரை விசாரிக்க எந்த சிரமமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடி தான் மொத்த திட்டங்களையும் உளறியதில் மசூர், ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுடன் சேர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தியது எப்படி? பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை சேர்ப்பது எப்படி? பாகிஸ்தானில் என்னென்ன பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன, என்பது போன்ற பல தகவல்களும் வெளிவந்தன’ என்று பயங்கரவாதி மசூர் அசாரை விசாரித்தது பற்றி டி.ஜி அவினாஷ் மோஹனானே ஐபிஎஸ் கூறியுள்ளார்.