'இதுக்கே கோபப்பட்டா எப்படி'?...இந்தியா மேட்ச்ல இன்னும் எவ்வளவு இருக்கு...வைரலாகும் வீடியோ!
Home > தமிழ் newsஇந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல் போட்டிகளை போன்று,ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி-20 போட்டிகள் மிகவும் பிரபலம்.அந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் ஆரோன் பிஞ்ச்,ரன் அவுட்டான விரக்தியில் நாற்காலியை அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மெல்போர்னில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி போட்டியில்,மெல்போர்ன் ரெனேகட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பௌலிங்கை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி,5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் பேட்டிங் செய்தது.20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்த ஸ்டார்ஸ் அணியால்,சேஸிங் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி,அந்த அணியின் வீரர் கேமருன் ஒயிட் அடித்த பந்து பந்துவீச்சாளரின் காலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பைத் தாக்கியது. அப்போது, மறுமுனையில் இருந்த பிஞ்ச்,கிரீஸுக்கு வெளியே இருந்ததால் வெறும் 13 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் கடும் விரக்தி அடைந்த பிஞ்ச்,வீரர்களின் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த நாற்காலியை தனது பேட்டால் அடித்து நொறுக்கினார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Aaron Finch is every local cricketer who has been given out LBW by one of their teammates #BBLFinal pic.twitter.com/nEV1k9CvTi
— Odds.com.au (@OddsComAu) February 17, 2019
A Bucket Moment to end all Bucket Moments as Finch is run out off Bird's boot!#BBLFinal | @KFCAustralia pic.twitter.com/ewI4i9WTZE
— KFC Big Bash League (@BBL) February 17, 2019