ஓஹோ... அப்படியா? ...'உலகின் சிறந்த டாய்லெட் பேப்பர் எது'?...விளக்கமளித்த கூகுள்!

Home > தமிழ் news
By |

கூகுளில்,உலகின் சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தான் கொடி வருவது போன்று தேடலில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என,கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஓஹோ... அப்படியா? ...'உலகின் சிறந்த டாய்லெட் பேப்பர் எது'?...விளக்கமளித்த கூகுள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து,இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.இது சமூகவலைத்தளங்களிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.இரு நாட்டை சேர்ந்தவர்களும் கடுமையான கருத்துக்களால் மோதி கொள்கிறார்கள்.

இந்நிலையில் கூகுளில் உலகத்திலேயே சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தானின் கொடி வருவதாகவும்,தேடலில் அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.இதனிடையே இந்த புகாரை மறுத்துள்ள கூகுள்.இதுதொடர்பாக தங்களின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது.

அதில் ''எழுப்பப்பட்ட புகார் சம்பந்தமாக எந்த ஆதாரமும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.இருப்பினும் எங்களின் தொழில்நுட்ப பிரிவு இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது போன்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூகுள் தெரிவித்துள்ளது.