இனி ஏடிஎம்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது... அதிரடி அறிவிப்பு!

Home > தமிழ் news
By |
இனி ஏடிஎம்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது... அதிரடி அறிவிப்பு!

ஏடிஎம்களின் வரவுக்கு பின்னர் வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது என்பது குறைந்துள்ளது. குறிப்பாக வங்கிகளே, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வங்கியின் அலுவல் பணிகளுக்கு தொந்தரவு தராமல் ஏடிஎம்களுக்குச் சென்று பணம் எடுத்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமானது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஏடிஎம் மிஷின்களில் பணத்தை நிரப்பி வைப்பது பற்றிய பதறவைக்கும் அறிவிப்பு ஒன்றை கூறியிருகிறது. 

 

அதன்படி, இரவு நேரங்களில்தான் மக்கள் கூட்டம் இல்லாமல், ஏடிஎம்கள் ஓரளவிற்கு நெருக்கடி இன்றி இருக்கும் என்பதால் அலுவலர்கள் அந்த நேரத்தில் சென்றுதான் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பி வைப்பார்கள். ஆனால் சில நாட்களாக சினிமா படங்களில் வருவது போலவே,  ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்காக செல்லும் வாகனங்களை குறிவைத்து,  கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன. 

 

இரவு நேரங்களில் பாதுகாப்பு உத்தரவில்லாமல் நடக்கும் இந்த மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான அலுவல் நேரமானது  ஒரு குறிப்பிட்ட நேரமாக மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நகர்ப்புறங்களைத் தவிர்த்து, உள் நகரங்களில் இரவு 9 மணி வரைக்கும், குக்கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம்கள் வங்கியின் அலுவல் நேரம் வரையிலும் மட்டுமே இயங்கும் என்றும் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே ஏடிஎம்களில் பணம் நிரப்ப வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தனியார் நிறுவனங்களே இந்த பணம் நிரப்பும் பொறுப்பை ஏற்றுள்ளதால் அவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி, அதில் மேற்கண்ட எல்லாமும் அடுத்த ஆண்டு 2019 பிப்ரவரி  முதல் நடைமுறைப்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BANK, ATM, INDIA