ஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்!
Home > தமிழ் newsகேரளாவில் கனமழையால் உண்டான வெள்ளப்பெருக்கில் பலரும் சிக்கியுள்ளனர், பலர் கவலைக்கிடமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடிக் கண்டுபிடித்து மீட்கும் பணியில், ராணுவம் மற்றும் தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், ஆறன்முளா, கோழஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் கேரளாவில் பெருமளவில் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளன. இதனால் அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 272 முகாம்களில் 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் படகுகள் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பொதுமக்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவரிடம் இருந்தும் கேரளாவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ வானாராய்ச்சி மையம் செயற்கைக் கோள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் கண்டுபிடித்து உதவ முன்வந்துள்ளது. இதே போல் ஆன்லைனில் இல்லாமல், ஆஃப் லைனில் இருந்தால் தாங்கள் இருக்கும் இருப்பிடத்தை கூகுள் மேப்பை பயன்படுத்தி பகிரக் கூடிய வசதியை கூகுள் நிறுவனம் கேரளாவுக்கு அளித்துள்ளது.