'WWE' போட்டியில் களமிறங்குகிறாரா 'தோனி'?...எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ட்விட்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களா? என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்ட கேள்வி தான்,தற்போது ட்விட்டரில் பட்டையை கிளப்பி வருகிறது.தோனி ராயல் ரம்பிள் போட்டியில் வருவாரா என,ரசிகர்கள் ஆர்வமுடன் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

'WWE' போட்டியில் களமிறங்குகிறாரா 'தோனி'?...எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ட்விட்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நீண்ட இடைவெளிக்குப்பின் அணியில் இணைந்த தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.மேலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்ததால் தொடர்நாயகன் விருதையும் தட்டி சென்றார்.தோனியின் கம் பேக்'யை பாராட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது.ரசிகர்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்ற இந்த பதிவிற்கு 'WWE யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் வழக்கறிஞர் ஹேமன் ராயல்டி கேட்டடிருந்தார்.

அவரது ட்விட்டர் பதிவில் “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை தோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது. எனவே ஐசிசி அதற்கான ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியிருந்தார்.இதற்குப் பதிலளித்த ஐசிசி, “உங்களுக்கும், ப்ரோக் லெஸ்னருக்கு உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கிறோம்” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் வரும் திங்கள் கிழமை (ஜன.28) நடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.மேலும் ரசிகர்கள்,தோனி WWE'யில் பங்கேற்பது போன்ற மீம்ஸ்களை ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

MSDHONI, TWITTER, ROYAL RUMBLE 2019, WWE