பெண்களை கவரும் ‘மோடி சேலை’..இணையத்தை கலக்கும் பிரதமர்!

Home > தமிழ் news
By |

பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சேலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்களை கவரும் ‘மோடி சேலை’..இணையத்தை கலக்கும் பிரதமர்!

பிரதமர் மோடியின் உருவம் உள்ளவாறு இருக்கும் சேலைகளை பெண்கள் ஆர்வமாக கடைகளில் வாங்கி வருகின்றனர். மேலும் இந்த சேலைகளை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

மோடி உருவம் பதித்த இந்த சேலைகளை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அறிமுகப்படுத்தியது. இதனை அப்போதே பாஜக பெண் தொண்டர்கள் வாங்கி விரும்பிக் கட்டத் தொடங்கினர்.

இதனை அடுத்து கடந்த 2015 -ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலின் போது மோடியை முன்னிலைப் படுத்தி பிரச்சாரங்களின் போது அம்மாநில பெண் தொண்டர்கள் கட்டி வலம் வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த மோடி உருவம் பதித்த சேலையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

MODISAREE, WOMAN, VIRAL