அதிரடி காட்டிய நியூஸிலாந்து வீரர், அடிச்சு தூக்கிய ‘தல’தோனி.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ் news
By |

இந்தியா-நியூஸிலாந்துக்கு  இடையேயான கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் இன்று பலப் பரீட்சை மேற்கொள்கின்றன.

அதிரடி காட்டிய நியூஸிலாந்து வீரர், அடிச்சு தூக்கிய ‘தல’தோனி.. வைரல் வீடியோ!

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்கிற கணக்கில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து  நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஆனாலும் அடுத்து நடந்த 2 -வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இரு அணிகளும் பலப் பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இதனை அடுத்து பேட்டிங் செய்ய ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இதில் தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் 25 பந்துகளில் 43 ரன்களும் கோலின் முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்களும் எடுத்து அசத்தினர்.

பின்னர் அடுத்தடுத்து வந்த  நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட 20 ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. இதில் தொடக்க ஆட்டக்காரரான நியூஸிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்டை தோனி ஸ்டெம்பிக்ங் மூலம் எடுத்த விக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்தியா விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் 38 ரன்களும், விஜய் சங்கர் 28 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் 20 ஓவரின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து 2-1 என்கிற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

TEAMINDIA, NZVIND, T20, MSDHONI, ICC, BCCI