'குட் பை'.. ராணியை பார்த்ததும் தெறித்து ஓடிய சிறுவன்.. எதுக்காக தெரியுமா?
Home > தமிழ் newsஒரு பெரிய செலிபிரிட்டி வந்தால் நம் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றால், எப்படியேனும் அடித்து பிடித்து கூட்டத்தை இடித்துக்கொண்டாவது அவருடன் நெருங்கி ஒரு செல்ஃபி எடுக்கத் தோன்றும். சிலருக்கு தூரத்தில் இருந்து பார்ப்பதற்காவதுத் தோன்றும். அவர்களைப் பார்த்ததில் கையும் ஓடல.. காலும் ஓடல என்போம், ஆனால் யாருக்கேனும் அடித்து பிடித்து ஓடிவிட வேண்டும் என்று தோன்றுமா? அப்படித் தோன்றினால் ஆச்சரியம்தானே?
அப்படித்தான் ஒரு மிடுக்கான சிறுவன், எலிசபெத் ராணியைக் கண்டதும் அரவம் தெரியாமல், தரையில் தவழ்ந்து தப்பியோடி தூரத்தில் சென்று ராணிக்கு பாய் சொன்ன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற தனது தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றுள்ளார் ராணி எலிசபெத், அதே நிறுவனத்துக்கு தனது வளப்பு பெற்றோர்களான டேவிட் மற்றும் கேரி கிராந்துடன் அங்கு வந்திருக்கிறான் சிறுவன் நாதன். அவன் எலிசபெத் ராணியைக் கண்டதும் பதற்றமாகி, நடுங்கியுள்ளான்.
எத்தனை பெரிய ஆள், ராணி. அவரே நேரில் வந்துள்ளாரே? அவரிடம் எப்படி பேசுவது.. அவர் முன்பாக எப்படி நிற்பது என்று அவரை கண்டு பிரமிப்பான சிறுவன், அவரைக் கண்ட பரவசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பி ஓடியுள்ள இந்த காட்சி வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது.