15 வயது சிறுமியிடம் இந்திய ராணுவ வீரர் செய்த வேலை.. பாய்ந்தது பாக்ஸோ சட்டம்!
Home > தமிழ் newsபதின்பருவ சிறுமியை, ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அவர்களை நாடே போற்றி வருத்தத்துடன் அடக்கம் செய்து விடைகொடுத்தது. இப்படி ஒரு சூழலில் 15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் குன்னூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர்.
குன்னூர் கிளப் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தோனூஸ் என்பவரது 27 வயது மகன் கிறிஸ்டோபர், இந்திய ராணுவ வீரராக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தவர். ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியில் இருந்த இவர், கடந்த வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு வந்த கிறிஸ்டோபர் பிப்ரவரி 15-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஏதேதோ பேசி வேளாங்கண்ணிக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே சிறுமியைக் காணாததால் தவித்துப் போன பெற்றோர் அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமியைத் தேடத் தொடங்கிய குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது கிறிஸ்டோபர் சிறுமியுடன் வேளாங்கண்ணியில் இருந்ததை அறிந்த போலீஸார் இருவரையும் அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
பின்னர் சிறுமியை கிறிஸ்டோபர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ராணுவ வீரர் கிறிஸ்டோபர், 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.