தனியார் பேருந்தினை ஊரே ஒன்று கூடி கொளுத்திய பரபரப்பு சம்பவம்!

Home > தமிழ் news
By |

நடந்த ஒரு பேருந்து விபத்தால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு பேருந்தையே ஊர் மக்கள் கொளுத்தியதாக பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-ஆப்பிலும் பேஸ்புக்கிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

தனியார் பேருந்தினை ஊரே ஒன்று கூடி கொளுத்திய பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டம் கருமாந்துறை அருகே சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்துள்ளனர்.

சேலம் முதல் பேளூர் வழியாக கருமாந்துறை வரை செல்லும் வழித்தடத்தில் இயங்கும் அந்த தனியார் பேருந்து தங்கள் ஊர் வாலிபர் மீது மோதியதால் அந்த வாலிபர் பலியானதை தாங்கிக்கொள்ள முடியாததால், வெகுண்டெழுந்த அந்த மக்கள் திரளென சாலைக்கு வந்து, ஒரு பெரும் கூட்டமாக நின்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பேருந்தின் பக்கவாட்டில் அடித்து நொறுக்கி, டயர்களை நாசம் செய்து பின்னர் பேருந்தை தீவைத்து கொளுத்துவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

ஆனால் உண்மையில் தவறு யார் மீது, சண்டை எப்படி தொடங்கியது, ஓட்டுநர் மற்றும் இயக்குநர்கள் எங்கு சென்றார்கள் என்பன போன்ற பல தகவல்களுடன் கூடிய ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FIREACCIDENT, ACCIDENT, BUS, SELAM, TAMILNADU