சவுதியில் பெண்ணுடன் உணவருந்திய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் கைது!
Home > தமிழ் newsசவுதி அரேபியாவில் பெண்ணுடன் சேர்ந்து உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட எகிப்தியரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் சவுதி அரேபியாவில் தொடர்ச்சியாக நிகழ்பவைதான் என்றாலும், ஒரே உணவகத்தில் பணிபுரியும் இருவர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதால், அந்த ஆண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெதா ஹோட்டலில் பணிபுரியும் சக ஊழியர்களான ஒரு ஆணும் பெண்ணும் பணிமுடிந்து அதே உணவகத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர். ஆனால் அவ்வாறு உணவு அருந்தக் கூடாதென்பது போன்ற சில ’ஜெண்டர் செக்ரிகேஷன்’ கட்டுப்பாடுகள் சவுதி அரேபியாவில் உள்ளதை கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் உணவருந்துவதை அந்த எகிப்தியர் ட்விட்டரில் பதிவிட்டார்.
பின்னர் உணவகத்தில் நிகழ்ந்த இந்த ‘ஒன்றாக உணவருந்திய சம்பவம்’ பாலின குற்றத்துக்கு இணையாகக் கருதப்பட்டு, விதிமுறைகளை மீறி, சக ஊழிய பெண்ணுடன் உணவருந்திய குற்றத்துக்காக உணவகத்தில் பணிபுரிந்த எகிப்திய ஊழியர், சவுதி அரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து பலரும் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
#مصري_يفطر_مع_سعوديه
— يحيى ⚠️ (@ii_ya7ya) September 9, 2018
ليش تظلموهم طلعوا مجرد زملاء عمل 🌝 pic.twitter.com/zxTgwkK59O