தங்கை மகனுக்காக தரையில் 'தவழ்ந்த' சூப்பர்ஸ்டார்.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
தங்கை மகனுக்காக தரையில் 'தவழ்ந்த' சூப்பர்ஸ்டார்.. வைரல் வீடியோ!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது தங்கை மகனுக்காக தரையில் தவழ்ந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

நடிகர் சல்மான் கான் தனது தங்கை அர்பிதாவின் மகன் அகிலுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செலவழித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் அகிலுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

ஒரு சமயத்தில் அகில் கீழே விழுந்து விட, அதைக்காணும் சல்மான் உற்சாகப்படுத்தி அவரை எழுந்து நிற்க வைக்கிறார். தொடர்ந்து அகிலுக்காக அவர் தரையிலும் தவழ்ந்து செல்கிறார்.இந்த வீடியோ மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

INSTAGRAM, BOLLYWOOD, SALMANKHAN