உயிரோடுள்ள 20 பாம்புகளை கைப்பையில் அடக்கியபடி, விமானத்தில் பயணித்தவர்!

Home > தமிழ் news
By |
உயிரோடுள்ள 20 பாம்புகளை கைப்பையில் அடக்கியபடி, விமானத்தில் பயணித்தவர்!

’ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன்’ என்பது சாமுவேல் ஜாக்சனின் பிரபலமான படம். இந்த தலைப்புக்கு பொருத்தமான ஒரு சம்பவம் ஒரு விமானத்தில் அரங்கேறியுள்ளது.

 

ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவுக்கு வந்துகொண்டிருந்தவரின் பையில், 20 பாம்புகளை உயிருடன் கொண்டு வந்திருந்தந்தை மாஸ்கோவில், சுற்றுச்சூழல் மற்றும் உயிரின பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

 

அனுமதியின்றி விதவிதமான பாம்புகளை தனது கைப்பைக்குள்  உயிருடன் வைத்து  எடுத்து வந்ததனால் அவரை ஜெர்மனி ஏர்ப்போர்ட்டை தாண்டி வந்த கதையை விசாரித்ததோடு, அவர் கொண்டுவந்த பாம்புகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  அவருடன் பயணித்த பயணிகள் இதை அறியாமல் இருந்துள்ளதே இதில் ஹைலைட்!

VIRAL, MANWITHSNAKESINFLIGHT, SNAKE, FLIGHT, AIRPORT