‘ஒரு ஐபோனுக்காக யாராவது கிட்னிய விப்பாங்களா?’.. வாழ்விழந்த வாலிபரின் சோகம்!
Home > தமிழ் newsஅது ஒரு காலம். ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே ஐபோனை வாங்கியிருப்பார்கள். இல்லை என்றால் பெரும் தொழிலதிபர்களாகவோ பணக்காரர்களாகவோ இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து ஐபோன் வாங்க நினைத்த நடுத்தர வர்க்கத்தினர் கூட EMI போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தினர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் ஐபோன் மோகம் என்கிற ஒன்று எழத் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஐபோன்களை குறைந்த விலைகளுக்கு விற்பது, அவற்றை திருடுவது என்று பலரும் இறங்கினர். பலர் ஒரு ஐபோனை திருடுவதற்காக, கொலை கூட செய்யத் தயாராகினர்.
இப்படி ஐபோன் மோகம் ஒருவரை எந்த அளவுக்கு பாடய்ப்படுத்தும் என்பதற்கு சாட்சியாய், சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிட்னியை விற்றுள்ள சம்பவம் தற்போது பெருத்த அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ஆம் வருடம் சீனாவைச் சேர்ந்த 17 வயது இளைஞராக (அப்போது) இருந்த ஸியாவா வான் என்பவருக்கு தனது பணக்கார நண்பர்கள் எல்லாம் ஐபோன் வாங்கிவிட்டதால், தானும் வாங்க வேண்டும் என்ற மோகம் எழுந்துள்ளது. அந்த சமயத்தில் ஆன்லைனில் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்கிற விளம்பரம் வந்துள்ளது. அவ்வளவுதான். சட்டத்துக்கு புறம்பாக தனது கிட்னியை 3,200 டாலருக்கு விற்று புரோக்கர் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டார்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போதுதான் அவருக்கு இருந்த இன்னொரு கிட்னியில் நோய்த்தொற்று இருந்ததை அறிந்து அதிர்ச்சியாகியுள்ளார். அந்த பழைய கிட்னி ஆபரேஷனின்போது அந்த கிட்னியில் இருந்த நோய்த்தொற்று இன்னொரு கிட்னிக்கும் பரவியுள்ளது. இதனால் மீண்டும் டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிர்பந்தம் இந்த இளைஞருக்கு உண்டாகியதோடு, மேற்படி சிகிச்சைக்கு வழியின்றி இவரது குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறது. ஒரு ஐ போனுக்காக கிட்னியை விற்று வாழ்க்கையையே தொலைத்தை இவரது கதை பலருக்கும் பாடம்!