’கேப்டன்' பொறுப்பிலிருந்து இதனால்தான் விலகினேன்: தோனி !

Home > தமிழ் news
By |
’கேப்டன்' பொறுப்பிலிருந்து இதனால்தான் விலகினேன்: தோனி !

கேப்டன் தோனி, தான் பதவி விலகிய காரணத்தை அதிரடியாகக்  கூறியுள்ளார்.  கேப்டன் தோனிக்கு பிறகு, விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பலவிதமான கேள்விகளையும் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார். இருப்பினும் ஒரு கேப்டனாக தன் பொறுப்புகளைச் செய்ய முனைவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத சிறந்த அணியை தற்போது விராட் கோலியின் தலைமையில் காண்பதாகவும் ரவி சாஸ்திரி கூறியிருந்ததற்கும் நிறைய ஒத்த, மாறுபட்ட கருத்துக்கள் வந்தன.

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புதிய கேப்டனுக்கு குறிப்பிட்ட ஆசுவாச நேரத்தைக் கொடுக்காமல், நல்லதொரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை’ என்றும்  தான் சரியான நேரத்தில் கேப்டனின் பதவியை விட்டுவிட்டேன் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டுள்ளதாகவும் அதனாலலேயே வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனக்கடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கான ஒரு சரியான அணியை தயார் செய்வதற்கு உண்டான கால அவகாசத்தை வழங்க வேண்டும்  என்பதற்காகவே தான் ’ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன்’ பதவியில் இருந்து விலகியதாகவும் கூறியுள்ளார்.

DHONI, MAHENDRASINGHDHONI, INDIA, CRICKET, VIRATKOHLI