டெஸ்ட் சீரிஸ் தரவரிசைப் பட்டியலில் கோலி!

Home > தமிழ் news
By |
டெஸ்ட் சீரிஸ் தரவரிசைப் பட்டியலில் கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் சமீபத்திய ஸ்போர்ட் ஸ்டோரிகளின் நாயகன். அடாவடியான நடவடிக்கைகள், அலட்டல்கள் இல்லாமல் இயல்பான உணர்ச்சி வேகமும் துடிப்புமே விராட் கோலியின் தனிச்சிறப்புகள்.  அவருக்கு எண்ணற்ற ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்திருப்பதும் இந்த ஜாலியான துடிப்புதான் என்றாலும் தற்போது கேப்டன் தோனிக்கு பின்னர், பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கியவுடன் கோலியின் வளர்ச்சி அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தும் அமையத் தொடங்கியது.

 

ஆனால் தனக்கெ உரிய துடிப்புடனும் கையில் எடுத்திருக்கும் புதிய பொறுப்புடனும், செயல்படத் தொடங்கிய விராட் கோலி, டெஸ்ட் சீரிஸ்களில் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்திருந்தது.  இதனை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 937 புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆனாலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 937 புள்ளிகளை பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என்றாலும், அவர் தரப்பில் இருந்து வரும் தகவல்களின்படி, கேப்டன் இன்னும் ‘மைல்ஸ் டு கோ’ மோடில்தான் இருக்கிறார்.!