தனது ஜீன்ஸை அணிந்ததால் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணண் !

Home > தமிழ் news
By |
தனது ஜீன்ஸை அணிந்ததால் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணண் !

தற்போது கொலையை விட கொலை செய்வதற்காக சொல்லப்படும் காரணங்கள் தான் மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது.சிறு சிறு சம்பவங்களுக்கு எல்லாம் கொலை செய்வது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.இதுபோல் ஒரு சிறு காரணத்திற்காக அண்ணனே தம்பியை குத்தி கொன்ற சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

 

தனது அனுமதி இல்லாமல், ஜீன்ஸ் எடுத்து அணிந்த  தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் தான் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தர்வாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரா. 37 வயதாகும் இவர் தன் உடன் பிறந்த சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த விவரம் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ராஜேந்திரா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.

 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `ராஜேந்திராவின் குடும்பத்தினர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ராஜேந்திராவின் அனுமதியில்லாமல், அவரது ஜீன்ஸை சுரேந்திரா அணிந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ராஜேந்திரா, சுரேந்திராவிடம் கடுமையாகச் சண்டையிட்டுள்ளார். அதன் உச்சகட்டத்தில், சுரேந்திராவை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார்.

 

இந்த விபரீதத்தை எதிர்பார்க்காத அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சுரேந்திராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் சுரேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்' என்றனர்.

 

ஒரு ஜீன்ஸுக்காக, தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார், தலைமறைவாகியுள்ள ராஜேந்திராவை தேடி வருகின்றனர்.