‘மிஸ்டர் 360’ ரசிகர்களின் அட்டகாசமான செயல்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் இணைந்திருக்கும் பேனருக்கும் பால் அபிஷேகம் செய்த பெங்களூரு ரசிகர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மிஸ்டர் 360’ ரசிகர்களின் அட்டகாசமான செயல்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!

ஐ.பி.எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கின்றன. கடந்த வருடம் நடந்த ஐ.பி.எல் டி20 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. இந்நிலையில் வரவுள்ள ஐ.பி.எல் டி20 லீக் தொடருக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருக்கும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இவர் ஐ.பி.எல் டி20 தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். மேலும் தென் ஆப்பிரிக்க வீரரான ஏபி டி வில்லியர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஏபி டி வில்லியர்ஸ்ஸை ‘மிஸ்டர் 360’ என கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2011 -ம் ஆண்டிலிருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற பிபிஎல் போட்டிகளில் ஏபி டி வில்லியர்ஸ் விளையாடி வருவது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

இந்நிலையில் ஏபி டி வில்லியர்ஸ் நேற்று தனது 35 -வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள், விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருக்கும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, ABDEVILLIERS, RCBFANARMY, VIRALVIDEO