'ரியல் ஜென்டில்மேன் கேம்'...'பேட்டிங்ல சொதப்பினாலும்,நேர்மையில ஜெயிச்சிட்டாரு'... கைத்தட்டிய அம்பையர்...வைரலாகும் வீடியோ!
Home > தமிழ் newsகிரிக்கெட் விளையாட்டினை ஜென்டில்மேன் கேம் என்று கூறுவார்கள்.அந்த வகையில் தனது நேர்மையான செயல்பாட்டின் மூலம் அம்பையர் முதற்கொண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்,இந்திய வீரர் கே.எல். ராகுல்.
ஆஸ்திரேலியவிற்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று ஜடேஜா 15-வது ஓவரை வீசினார். அப்போது ஆஸ்திரேலியா தரப்பில் விக்கெட் எதுவும் விழவில்லை.இந்த நிலையில்,ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹாரிஸ், க்ரீஸை,ஜடேஜா வீசிய பந்தை க்ரீஸை விட்டு வெளியே வந்து மிட்-ஆன் நோக்கித் தூக்கி அடித்தார். அப்போது இந்திய அணியின் கே.எல் ராகுல் அபாரமாக பாய்ந்து பிடித்தார்.கேட்ச் பிடிக்கப்பட்டதைப் பார்த்த கேப்டன் கோலி மற்றும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் துள்ளிக்குதித்து ராகுலை பாராட்ட ஓடி வந்தனர்.
அப்போது ராகுல் இது கேட்ச் இல்லை,பந்து தரையில் பட்ட பின்புதான் கேட்ச் பிடித்ததாக செய்கையில் கூறினார்.உடனே டி.வி-யிலும் ரீப்ளே காட்டப்பட்டது.அதிலும் கேட்ச் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.இதனால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இருப்பினும் பும்ரா ஓடி வந்து 'குட் ட்ரை' என ராகுலை பாராட்டிவிட்டு சென்றார்.
இந்நிலையில் ராகுலின் நேர்மையான செயல்பாட்டினை மைதானத்தில் அம்பையராக இருந்த இயன் கவுல்ட் கைத்தட்டி பாராட்டினார்.அதோடு ராகுலின் நேர்மையான செயல்பாட்டினை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.விக்கெட் விழவில்லை என தெரிந்தும்,அவுட் எனச் சொல்லி மூன்றாவது அம்பையரின் முடிவிற்கு செல்லும் வீரர்கள் மத்தியில் ராகுலின் நேர்மை பலரை கவர்ந்துள்ளது.
இந்த தொடரில் பேட்டிங்கில் ராகுல் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும்,தனது நேர்மையான செயல்பாட்டினால் அனைவரின் மனதிலும் நின்று விட்டார் என ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A good effort from Rahul and he immediately says it bounced. Great stuff. Umpire Gould a big fan of it #CloseMatters#AUSvIND | @GilletteAU pic.twitter.com/7nA0H5Lsc7
— cricket.com.au (@cricketcomau) January 4, 2019