'எனக்குனே கிளம்பி வருவீங்களா'...இந்திய வீரரை அவமானப்படுத்திய ரசிகர்கள்...எச்சரித்த ஆஸி கிரிக்கெட் வாரியம்!

Home > தமிழ் news
By |
'எனக்குனே கிளம்பி வருவீங்களா'...இந்திய வீரரை அவமானப்படுத்திய ரசிகர்கள்...எச்சரித்த ஆஸி கிரிக்கெட் வாரியம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது,பேட்டிங் செய்ய வந்த இந்திய கேப்டன் கோலியை பார்த்து அநாகரீகமாக கோஷங்களை எழுப்பிய ரசிகர்களுக்கு,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.நம் நாட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என ரசிகர்களை எச்சரித்துள்ளது.

 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதுவரை ஆஸ்திரேலியா வந்த இந்திய அணி கேப்டன்களை விடவும்,கோலியின் சிறப்பான அணுகுமுறையினால் இந்தியா,ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பானதொரு தொடக்கத்தை அமைத்துள்ளது.

 

இந்நிலையில் பேட்டிங் செய்ய வந்த போது,ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலரின் அணுகுமுறையும், எழுப்பிய கோஷங்களும் அநாகரீகமாக இருந்தன.இந்தத் தொடரில் இது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ரசிகர்கள்,விராட் கோலிக்கு எதிராக இப்படி கூச்சலிடும் சம்பம் நடைபெற்றுள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் "தொடர்ந்து இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை,பொறுத்துக்கொள்ள முடியாது.ரசிகர்கள் நிச்சயமாக கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.அவர்கள் நமது நாட்டிற்கு வந்துள்ளார்கள்.எனவே நாம் சரியான மரியாதையை அவர்களுக்கு வழங்க வேண்டும்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ரசிகர்களின் செயல்பாடு வருத்தமளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் விமர்சித்துள்ளார்.முன்னதாக மெல்பெர்னில் நடைபெற்ற ஆட்டத்தின் போது,ஃபீல்டிங் செய்யும் போது கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி விராட் கோலி ராயல் சல்யூட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, CRICKET, CRICKET AUSTRALIA, CROWD BOOS