ஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் !
Home > தமிழ் newsகேரளாவில் 100 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித்தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் ஓயாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட 14 மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மழை 324 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. கொட்டுத் தீர்க்கும் மழையில் கண்ணீருடன் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மீட்புப் பணியின்போது இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் விஜய் வர்மா,பனிக்குடம் உடைந்த நிலையில் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த கர்ப்பிணி ஒருவரை சாதுர்யமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மாநிலம் முழுவதும் கடற்படை, விமானப் படை, ராணுவம், கடற்கரை பாதுகாப்பு குழு, தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடைவிடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்களது சேவை மிகவும் இன்றியமையாதது.