கேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ !

Home > தமிழ் news
By |
கேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ !

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை மற்றும் வெள்ளம் அம்மாநில  மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.  கேரள வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பேரிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.வீடுகளை   இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு தரப்பிலிருந்தும் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் கோவை மாவட்ட கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி 16,000 கிலோ அரிசியை நிவாரணமாக அனுப்பியுள்ளார்.25 கிலோ அரிசி கொண்ட 640 மூட்டைகள் மற்றும் துணிமணிகளை கொச்சிக்கு அனுப்பியுள்ளார்.

 

கொச்சின் தமிழ்ச்சங்கம் ஆறுக்குட்டியைத் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்க ஆறுக்குட்டி உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.வந்த அரிசிமூட்டைகளையும் பிற உதவிப்பொருட்களையும் பெற்ற எர்ணாக்குளம் மாவட்ட கலெக்டர் கே.மொகமது ஒய்.சஃபிருல்லா மற்றும் சிறப்பு ஆபீசர் எம்.ஜி.ராஜமாணிக்யம் ஆகியோர் இடுக்கிக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.